வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (20/04/2017)

கடைசி தொடர்பு:09:23 (21/04/2017)

சவுதி அரேபியாவில் புதிய சட்டம் - வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்!

சவுதி அரேபியாவில் உள்ள ஷாப்பிங் மால்களில்,  அந்த நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று, சவுதி அரேபியத் தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


சவுதி அரேபியாவில், 2030-ம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சவுதி அரேபியாவில் சிறு, குறு தொழில் நடைபெறும் இடங்களில், 15 லட்சம் பேர் வரை வேலை பார்த்துவருகின்றனர். அதில், 3 லட்சம் பேர் மட்டுமே சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவுதியில், சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில், 5-ல் ஒருவர் மட்டுமே அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

 2020-ம் ஆண்டுக்குள் இந்தத் துறைகளில் சவுதி நாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில், அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சவுதி அரசின் இந்த நடவடிக்கையால், ஏராளமான இந்தியர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.