Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றே வாரம்தான்! கோழி முட்டைகளை அடைகாத்துப் பொரியவைத்த அதிசய மனிதன்!

பிரான்ஸைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ளார்.

பாரிஸில் வினோதமான செயல்களால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஆபிரகாம் பாயின்சிவல். இவர் கோழி முட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரியவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார். பாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார் இவர். அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டகத்துக்குள், வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு அவர் மூன்று வாரங்கள் உறங்கியுள்ளார். தான் அடைகாத்துப் பொரியவைத்த கோழிக் குஞ்சுகளைத் தனது பண்ணையில் வளர்க்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஆபிரகாமின் செயலுக்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆபிரகாமின் செயல் விலங்குகள் நல உரிமைக்கு எதிரானது எனவும்,  இது கொண்டாடக்கூடிய ஒரு சாதனை அல்ல எனவும் விலங்குகள் நல அமைப்புகளின் தரப்பில் கூறப்பட்டுவருகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close