காணாமல் போன MH370 மலேசிய விமானம் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்!

மலேசியாவிலிருந்து காணாமல் போன விமானம், முன்பு தேடப்பட்ட இடத்திலிருந்து வடக்கில் விழுந்திருக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2014-ம் ஆண்டு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று காணாமல் போனது. விமானத்தின் பாகங்களைக் கடலில் தேடி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தேடுதல் பணி நிறுத்திக்கொள்ளப்பட்டது. விமானத்தின் மாதிரி பாகங்களைக் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,' விமானத்தின் மாதிரியை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாய், ரீயுனியன் தீவில் கிடைத்த விமானத்தின் இறகு பாகங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் முன்னர் தேடப்பட்ட பகுதிக்கு வடக்கில் 25000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விழுந்திருக்கலாம்' என தெரிவித்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!