வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (21/04/2017)

கடைசி தொடர்பு:18:08 (21/04/2017)

இந்தியர் குல்பூஷனை காப்பாற்ற ட்ரம்பிடம் மனு!

பாகிஸ்தானால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்கர்கள் வெள்ளை மாளிகையில் மனு அளிக்க கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

குல்பூஷன் ஜாதவ்

முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இவரைக் காப்பாற்ற அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் வெள்ளை மாளிகையில் மனு அளிக்கவுள்ளனர். அதில் ஜாதவைக் காப்பாற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக மே 14-ம் தேதிக்குள் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறவுள்ளனர். ஜாதவைக் காப்பாற்ற இந்திய அரசாங்கமும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஜாதவ் ஒரு உளவாளி என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது இந்தியா.