Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எச்1பி விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சரிடம் ஜெட்லி ஆலோசனை

எச்1பி விசா கட்டுப்பாட்டினால் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸிடம் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அரசு முறைப்பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார், அமெரிக்கா சென்றுள்ள அவர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் வில்பர் ராஸை சந்தித்துப் பேசினார். அதில், 'எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

எச்1பி விசாக் கட்டுப்பாட்டினால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்கள் ஆற்றிய பங்குகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தெரிவித்த அருண் ஜெட்லி, 'அடுத்து வரும் சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையே ஆண்டுக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வர்த்தகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement