வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (22/04/2017)

கடைசி தொடர்பு:18:34 (22/04/2017)

ஒபாமா நியமித்த இந்திய மருத்துவரை நீக்கினார் ட்ரம்ப்!

ஒபாமாவால் அமெரிக்காவின் முதன்மை மருத்துவராக நியமிக்கப்பட்ட விவேக் மூர்த்தி, ட்ரம்ப் அரசாங்கத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விவேக் மூர்த்தி

அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சியின் போது ‘அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் முதன்மை மருத்துவராக’ தேர்வு செய்யப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி. 2014-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க மேலவை சார்பாக முதன்மை மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டவர்.

தற்போது விவேக் மூர்த்தியை பதவியை விட்டு நீக்கியுள்ளது ட்ரம்ப் அரசாங்கம். இந்தப் பதவியில் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த சில்வியா ட்ரெண்ட் ஆடம்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆடம்ஸ் நர்ஸ் ஒரு நர்ஸ் ஆவார். அமெரிக்காவின் முதன்மை மருத்துவராக ஒரு நர்ஸ் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

அமெரிக்காவின் முதன்மை மருத்துவர் பதவியில், ஒரு அமெரிக்க வாழ் இந்தியராக, இளம் வயதிலேயே பதவியேற்றவர் விவேக் மூர்த்தி. ’இந்தப் பெருமைமிகு பதவியில் இத்தனை காலம் பணியாற்றியது தனக்குக் கிடைத்த பெருமை’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.