Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டவிரோதமாக பிரிட்டனில் இருந்த 38 இந்தியர்கள் கைது!

பிரிட்டனில், சட்டத்துக்கு புறம்பாகத் தங்கியிருந்த 38 இந்தியர்களை, அந்த நாட்டு அரசாங்கம் கைதுசெய்துள்ளது. எம்.கே.க்ளோத்திங் மற்றும் ஃபேஷன் டைம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் கடந்த வாரம் ஆய்வுசெய்தபோது, பிரிட்டன் சட்டத்துக்குப் புறம்பாக இந்தியர்கள் 38 பேர் வேலைசெய்து வந்தது தெரியவந்தது. மேலும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்தச் சோதனையில் சிக்கினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 31 பேர், தங்கள் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்துள்ளனர். ஏழு பேர், பிரிட்டனில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். ஒருவர், அவரது விசா விதிமுறைகளுக்கு உள்படாத வகையில் இருந்துள்ளார். மேலும், 19 பேரை உடனடியாகக் கைது செய்து, சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பிரிட்டன். மீதம் இருக்கும் 20 பேரை, அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்துறை அமைச்சகத்துக்கு உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement