Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய இயற்கைப் போராளி சமந்தராவுக்கு, 'பச்சை நோபல்' விருது!

ஒடிசாவில், நியமகிரி மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அலுமினியம் மற்றும் பாக்ஸைட் சுரங்கங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்த இயற்கை ஆர்வலர், ப்ரஃபுல்லா சமந்தராவுக்கு, ' பச்சை நோபல்' என்று சொல்லப்படும், 'கோல்டுமேன் சூழலியல் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

gold man prize

ஒவ்வொரு வருடமும் உலகில், இயற்கைக்காகப் போராடும் போராளிகளைக் கண்டுபிடித்து, சிறந்த ஆறு பேருக்கு 'பச்சை நோபல்' பரிசு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படும். அந்த வகையில், இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஆறு பேரில், இந்தியாவைச் சேர்ந்த ’ப்ரஃபுல்லா சமந்தரா’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

'வேதாந்தா' என்ற தனியார் நிறுவனம், நியமகிரி மலையில் பாக்ஸைட் சுரங்கத்தைத் தோண்டியது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்தால், ஒடிசாவின் வளமான காடுகள் முற்றிலும் அழிக்கப்படும். மேலும், அப்பகுதியின் பூர்வகுடிகளான  'டோங்க்ரியா கோண்டு' இனம் முற்றிலுமான அழிவைச் சந்திக்கும் அபாயம் இருந்தது. இதை எதிர்த்து, கடந்த 12 வருடங்களாகத் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்தவர், சமந்தரா. அதுமட்டுமல்லாமல், சூழலியல் பிரச்னைகளுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் களத்தில் நிற்பவர்.

அமெரிக்காவில் அளிக்கப்பட இருக்கும் சூழலியல் விருதோடு சேர்த்து, இவரது சேவையைப் பாராட்டி ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவரைப் போலவே, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு எதிராகப் போராடும் வெண்டி போமேனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement