வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (25/04/2017)

கடைசி தொடர்பு:17:15 (25/04/2017)

விண்ணில் செலுத்தப்பட்ட கால்பந்து மைதானம் அளவிலான நாசாவின் 'சூப்பர்' பலூன்!

நியூசிலாந்தில் உள்ள வனாகா நகரத்தில் நாசாவின் 'சூப்பர்' பலூன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த பலூன் 100 நாள்கள் விண்வெளியில் பறந்து அறிவியல் பூர்வமான தகவல்களைச் சேகரிக்கும்.

NASA super balloon

காஸ்மிக் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றின் நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து ஒளிரும் புற ஊதா ஒளியை உருவாக்குகின்றன. ஆற்றல் மிகுந்த இந்த காஸ்மிக் கதிர்கள் குறித்தும், புற ஊதா ஒளி குறித்தும் துருவப் பகுதியில் பறக்கவிருக்கும் இந்த சூப்பர் பலூன் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.

நீடித்து உழைக்கக்கூடிய பாலி எத்திலீன் ஃபிலிம் கலவையால் இந்த உயர் அழுத்த பலூன் உருவாக்கப்பட்டுள்ளது. தடிமன் குறைவானது என்றாலும் வலிமையானதாக இந்த பலூனின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 18.8 மில்லியன் கியூபிக் அடி கொள்ளளவு கொண்ட இந்த பலூன், பூமியில் இருந்து சுமார் 33.5 கிலோமீட்டர் (1,10,000 அடி) உயரத்தில் விண்வெளியில் பறக்கவிருக்கிறது.

இதற்கு முன்னர் ஏழு முறை திட்டமிடப்பட்டு, மிக மோசமான வானிலை காரணமாக இந்த பலூன் விண்ணில் செலுத்தப்படுவது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க