பாம்பை கண்டா இலையைக் காணோம்... இலையைக் கண்டா பாம்பை காணோம்... புரியாத புதிர்!

Photo Credits (Jerry Davis)

இங்கே இருக்கும் புகைப்படத்தில், ஒரு பாம்பு இருக்கிறது. உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? தெரியவில்லை என்றால் பரவாயில்லை, ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பாம்பை, பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உங்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கலாம்.

அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் உயிரியில் பயின்றுவருகிறார் ஹெலன். அவரின் நண்பர் ஒருவர், உதிர்ந்த இலைகளுக்கு நடுவில் ஒரு பாம்பு தவழ்ந்துசெல்வதைத்  தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பாம்பு, இலையின் நிறத்துடன் ஒன்றிவிட்டதால், பாம்பு எது... இலை எது என்பதையே சட்டெனக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை, ஹெலன் ட்விட்டரில் போஸ்ட் செய்ய, உலகில் இருக்கும் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்கள் எல்லாம் வரிசையில் நின்று 'இந்த புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளலாமா?' என்று விடாமல் கமென்ட் செய்திருக்கின்றன. ஹெலனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, உலக அளவில் ஓவர் நைட் ட்ரெண்டாகிவிட்டார். ஆனால், எவ்வளவுதான் சொன்னாலும், அதைப் பாம்பு என நம்ப, பலர்  மறுக்கின்றனர். ஹெலனின் புகைப்படம், ஃபோட்டோஷாப் என்னும் பட்சத்தில்... உலகையே ஏமாற்றிவிட்டார் என்று சொல்லலாம். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!