வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (27/04/2017)

கடைசி தொடர்பு:08:36 (28/04/2017)

700 மில்லியன் பயனாளர்களைக் கடந்தது இன்ஸ்டாகிராம்..!

பிரபல போட்டோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராம், நேற்று 700 மில்லியன் (70 கோடி) பயனாளர்களைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,  '700 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளர்களைக் கடந்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதுவும் கடைசி 100 மில்லியன் பயனாளர்கள் மிக விரைவாக இணைந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி' என அறிவித்துள்ளது. 

இன்ஸ்டாகிராமின் டைம்லைன் இதோ...

அக்டோபர் 6, 2010 - இன்ஸ்டாகிராம் அறிமுகம்செய்யப்பட்டது. பிப்ரவரி 26, 2013 - 100 மில்லியன் பயனாளர்களைக் கடந்தது. மார்ச் 25, 2014 - 200 மில்லியன் பயனாளர்களைத் தொட்டது. ஜூன் 21, 2016 - 500 மில்லியன் பயனாளர்களைக் கடந்தது. டிசம்பர் 15, 2016 - 600 மில்லியன் பயனாளர்களைத் தொட்டது. ஏப்ரல் 26, 2017 - 700 மில்லியன் பயனாளர்களைக் கடந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் சொன்ன அந்தக் கடைசி 100 மில்லியன் பயனாளர்கள், வெறும் நான்கு மாதத்துக்குள்ளாகவே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க