உலகின் மோசமான ஏர்லைன்ஸ் இதுதானாம்!

உலகின் மோசமான விமானச் சேவை நிறுவனமாக, ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸைத் தேர்வுசெய்துள்ளது, சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று. 

Jetstar
 

’சாய்ஸ்’ என்னும் சர்வதேச ஆய்வு நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள விமானச் சேவை நிறுவனங்களை ஆய்வுசெய்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், விமானச் சேவையின் தரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்குறித்து  கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆய்வு முடிவில், துபாயின் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' உலகிலேயே சிறந்த விமானச் சேவை நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் நிறுவனம்தான் உலகின் மோசமான விமானச் சேவை நிறுவனம் என்றும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸ்டார் ஏர்லைன்சின் விமானங்கள், 4-5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவது வழக்கமாம். இந்த ஆய்வு முடிவுகள்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெட்ஸ்டார் நிறுவனம், ’ஆய்வு, முறையாக நடத்தப்படவில்லை. இது ஒரு பொய்யான ஆய்வு, உலக மக்களை ஏமாற்றி வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!