Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடகொரியாவுக்கு இந்த இரண்டுதான் ஏற்றுமதி! இந்தியா திட்டவட்டம்

'உணவு, மருந்துகள் தவிர வேறெந்த ஏற்றுமதியும் வடகொரியாவுக்கு செய்யப்போவதில்லை' என இந்திய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

வடகொரியா

ஐ.நா-வின் பாதுகாப்புக் கவுன்சில், வடகொரியாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு இணங்கி, 'உணவு, மருந்து தவிர இனி எந்தவொரு பொருளையும் இந்தியாவிலிருந்து வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்போவதில்லை' என்ற வழக்கத்தை இந்தியா பின்பற்றிவருகிறது. சமீபத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பின்படி, எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ, ஆயுதங்களோ அல்லது அணு ஆயுதங்களோ, தொழில்நுட்ப உதவிகளோ செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் தொடர்பான வர்த்தகப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும் வடகொரியாவுக்கு எந்தவித ராணுவப்  பயிற்சிகளும் இந்தியாவில் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement