Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முடக்கிப்போட்ட மாரடைப்பு.. உயிருக்கு போராடும் 'நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிம்?!

'நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாகிஸ்தான் கராச்சி நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

dawood

சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராகிம். அவருக்கு வயது 61. மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 'நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதற்கிடையில், தாவூத் இப்ராகிமின் உடல்நிலை குறித்து சில நாட்களாக தொடர்ந்து பலவிதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கராச்சி நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உயிருக்குப் போராடி வரும் மோசமான நிலையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவலை மறுத்துள்ளார் தாவூத் இப்ராகிமின் தம்பியும், தேடப்படும் குற்றவாளியுமான சோட்டா ஷகீல். 'தாவூத் பூரண நலமாக உள்ளார். எல்லாம் வதந்தி' என கூறியுள்ளார் அவர். தாவூத் உடல்நிலை குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு மறைத்து வருவதாக இந்தியா கூறிவந்தது. இந்நிலையில், தாவூத் குறித்து இத்தகவல் பரவி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement