பிலிப்பைன்ஸ் அருகே பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

 பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்தானாவோ தீவுகளில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ்-


பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவில் நேற்று நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தை 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிந்துள்ளது. ஆனால், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பயங்கரமான நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கடலோரத் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலநடுக்கத்தால் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து பலரும் வீடுகளின்றித் தவித்துவருவதாகக் கூறப்படுகிறது. சிலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!