காஷ்மீர் பிரச்னையை தீர்க்க துருக்கி அதிபரின் யோசனை!

இந்திய சுற்றுப் பயணத்தில் இருக்கும் துருக்கி நாட்டு அதிபர் தய்யீப் எர்டோகன் (Tayyip Erdogan), காஷ்மீர் பிரச்னையை தீர்க்க, 'பல தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் சாதகமான ஒரு முடிவை நாம் எட்ட முடியும்' என்று ஒரு செய்தித் தொலைக்காட்சியின் நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும், 'இனிமேலும் காஷ்மீர் பிரச்னையில் உயிரிழப்பை அனுமதிக்கக் கூடாது. பலதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம், பிரச்னையை தீர்ப்பதற்கான வழியை கண்டறியலாம். அதன் மூலம், நம் முன் இருக்கும் கேள்விக்கான பதிலை அடைந்து, இரு நாடுகளுக்கும் சாதகமான ஒரு முடிவை எட்டலாம்' என்றுள்ளார்.

இந்திய பயணம் குறித்து பேசிய எர்டோகன், 'நான் கடந்த 2008-ம் ஆண்டு துருக்கியின் பிரதமராக இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளேன். அப்போது இருந்ததைவிட இந்தியா இப்போது இன்னும் வலிமையாக மாறியுள்ளது. எல்லாராலும் மதிக்கத்தக்க வகையில் இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியப் பயணம், இரு நாட்டு உறவிலும் மேலும் வலு சேர்க்கும்.' என்று விளக்கினார்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!