இந்த நாய்க்குட்டி ஏன் வைரல் தெரியுமா?  | Dog Who Climbs On Another Dog To Beg For Treats goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (03/05/2017)

கடைசி தொடர்பு:12:05 (03/05/2017)

இந்த நாய்க்குட்டி ஏன் வைரல் தெரியுமா? 

அமெரிக்காவில், மிச்சிகன் நகரில் வசித்துவரும் அட்ரியானா என்பவர், இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துவருகிறார். அவை, 'ஹேன்க்' என்கிற 10 வயது பெரிய நாய் மற்றும் 'பெல்லா' என்கிற ஒரு வயது குட்டி நாய். ஹேன்க் உருவத்தில் பெரியதானாலும் குட்டியான பெல்லாவைப் பார்த்தால் பயந்து நடுங்குமாம். பெல்லா குட்டியாக இருப்பதால், பிறரின் கவனத்தை ஈர்க்க ஹேன்க் மீது ஏறி நிற்க, தானாகக் கற்றுக்கொண்டது. பெல்லா, ஹேன்க் மீது ஏறி நின்று உணவு கேட்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. 

bella

இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், 'பெல்லாவுக்குப் பசி எடுத்தால், ஹேன்க் மீது ஏறி நின்று, என்னைப் பாவமாகப் பார்க்கும். ஒரு வயது மட்டுமே நிரம்பிய பெல்லா, தன்னைவிடப் பல மடங்கு பெரிய நாயின்மீது ஏறி நிற்பது, முதலில் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பெல்லாவின்  'attitude’க்கு நிறைய ரசிகர்கள் குவிந்துவிட்டனர். டிவி சேனலில் இருந்து பெல்லாவைப் படம் எடுக்க வருகிறார்கள். பெல்லா, யாரைப் பார்த்தும் பயப்படுவதில்லை' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க