Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெற்காசிய செயற்கைக்கோள் எப்படி? பாகிஸ்தான் சொல்வது இதுதான்

ஜிசாட்-9 விண்கலத்தின்மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து, இன்று மாலை 4.57 மணிக்கு விண்ணில் பாய்ந்தது தெற்காசிய செயற்கைக்கோள். மூன்று ஆண்டுகளாகத் தயாராகிவந்த இந்த செயற்கைக்கோள், 2230 கிலோ எடையில் 235 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை, நவீன கிரையோஜனிக் தொழில்நுட்பம்மூலம் வடிவமைத்துள்ளார்கள்.

SouthAsia Satillite


தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பேரிடர் கால மேலாண்மை, அண்டை நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ள எனப் பல சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. மேலும், பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், தட்ப வெப்ப நிலைகள் ஆகியவைகுறித்தும் இந்த செயற்கைக்கோள் ஆய்வுசெய்து முடிவுகளை வெளியிடும். ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ என்றழைக்கப்படும் ஜிசாட் 9, இந்தியாவைச் சுற்றியுள்ள சார்க் நாடுகளான ஸ்ரீலங்கா, பூட்டான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் மாலத்தீவுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் விலகிக்கொண்டது. தங்களுக்கான செயற்கைக்கோள் திட்டத்தைத் தாங்களே பார்த்துக்கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது. இந்த செயற்கைக்கோள் திட்டத்தில் தொடர்புடைய அத்தனை நாடுகளும் இயக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர், நஃபீஸ் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு, சொந்தமான விண்வெளி மையம் உள்ளது. தொழில் நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட வகையில் அது செயல்பட்டு வருகிறது. தெற்காசிய செயற்கைக் கோள் சார்க் நாடுகளுக்கானது என்று இந்தியா சொன்னாலும், இதன் மூலம் கூட்டுறவு திட்டத்தை செயல்பட முடியாது. எனவே, இதை பாகிஸ்தானால் ஆதரிக்க முடியாது.


இது இந்தியாவிற்கான திட்டம்தான். பிராந்தியத்துக்கான முயற்சி இல்லை" என்றார்.

படம் : PTI

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close