வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (06/05/2017)

கடைசி தொடர்பு:20:22 (06/05/2017)

பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதரான பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள குழந்தைகளைச் சந்தித்து பாலியல் ரீதியான வன்முறைகளை எப்படி எதிர்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து பரப்புரை செய்து வருகிறார்.

 

 

So my hair is apparently very fascinating!! It was so funny being petted!! It lasted a good 10 minutes.. Lol!! We are all beautifully different in so many ways. Don't let anyone ever tell you that you are less.. #EndViolence #unicef #thistimeforafrica #childline @pantene #pantenegirl

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

 


ஆப்பிரிக்காவில் குழந்தைகளை சந்தித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த வீடியோவில் ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவை சுற்றி நின்று, அவரின் தலை முடியை கோதிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவிடம், ”உங்கள் தலைமுடி அழகாக உள்ளது” என்கிறார்கள். அதற்கு பிரியங்கா, ”உங்கள் தலைமுடி சுருள் சுருளாக அழகாக உள்ளது” என்கிறார் சிரித்தபடி. பூமியில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகு தான் என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரியங்கா!
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க