Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

82 பெண்களை விடுவித்த போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு..!

நைஜீரிய நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 219 பெண் குழந்தைகளில் 82 பேரை தற்போது விடுதலை செய்துள்ளனர்.


போகோ ஹரம் என்பது நைஜீரிய நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஆகும். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இணை அமைப்பு என கூறப்படும் இந்த அமைப்பு, 2014-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சிபோக் என்ற கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளியில் படித்த 276 பெண் குழந்தைகளை கடத்திச் சென்றனர். அந்தப் பள்ளி நைஜீரிய நாட்டில் போர்னோ மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் அனைத்துத் தரப்பு மக்களையும் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியது.

போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் குழந்தைகளை மீட்பதற்கு உலக நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தீவிரவாத அமைப்புகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த அக்டோபர் மாதம்  21 குழந்தைகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் விடுவித்தனர். இந்த நிலையில் மீதமுள்ள குழந்தைகளை விடுதலை செய்வது குறித்து தீவிரவாதிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், பெண் குழந்தைகள் 82 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக போகோ ஹரம் தீவிரவாதிகள் கொஞ்சம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் எத்தனை தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படவில்லை. இன்னமும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிரவாதிகள் பிடியில் இருக்கலாம் என்று தெரிகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close