வெளியிடப்பட்ட நேரம்: 07:03 (09/05/2017)

கடைசி தொடர்பு:07:03 (09/05/2017)

தமிழ் விக்கிபீடியாவின் அடுத்த இலக்கு 10 லட்சம் கட்டுரைகள்!

Wikipedia

'தமிழ் விக்கிப்பீடியா' தன்னுடைய நெடுநாள் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை எட்டிப் பிடித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவது 'விக்கிப்பீடியா' தளம். இதன் தமிழ் மொழி பக்கம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ஒரு லட்சம் கட்டுரைகளை இலக்காகக்கொண்டு இயங்கியது. இன்று அது தன் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை அடைந்துள்ளது. 

தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது குறைவுதான் என்றாலும், இது மகிழ்ச்சியான செய்திதான் என்கின்றனர் இணையத் தமிழ் ஆர்வலர்கள். மக்கள்தொகையில் குறைந்த அளவே உள்ள பல மொழிகளில் இந்த இலக்கைக் கடந்துவிட்டனர். ஒப்பீட்டளவில் இந்தியாவில் தமிழர்கள்தான் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கட்டுரைகள் குறைந்த அளவே வெளியிடப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது, கட்டுரைகளைச் சரிபார்க்க குறைவான அளவிலேயே ஆட்கள் இருப்பதுதான். 3 கோடி மக்கள் மட்டுமே பேசக்கூடிய டச்சு மொழியில்கூட 10 லட்சம் கட்டுரைகள் தரவேற்றப்பட்டிருக்கின்றன. அதைவிட அதிகமான மக்கள் பேசும் தமிழில் 14 ஆண்டுகளில் தற்போதுதான் ஒரு லட்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த விக்கிபீடியாவில் 1,500 கோடி சொற்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கணினியில் தமிழை யுனிகோட் எழுத்துருவில் இலகுவாக எழுத அதை உருவாக்கிய முன்னோடியும்,இ-கலப்பை நிறுவனருமான முகுந்த் சுப்பிரமணியன் இது குறித்து தெரிவிக்கையில், "இந்த இலக்கை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அடைந்ததைவிட மிக விரைவாக அடுத்த இலக்கான 10 லட்சத்தை அடைய வேண்டும். தமிழர்கள் அதிக அளவில் இந்த முயற்சியில் பங்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்