இப்படி ஒரு விருந்தாளி உங்க சமையலறையை எட்டிப் பார்த்தால் என்ன செய்வீங்க? | Bear Visits Back Deck in Avon

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (09/05/2017)

கடைசி தொடர்பு:12:23 (09/05/2017)

இப்படி ஒரு விருந்தாளி உங்க சமையலறையை எட்டிப் பார்த்தால் என்ன செய்வீங்க?

அமெரிக்காவின் அவான் நகரத்தில் வசிக்கும் சார்லி வைட்னி, தன் குடும்பத்தினருக்காக ’சாக்லேட் ப்ரௌனீஸ்’ (brownies) செய்து கொண்டிருந்தார். சார்லியின் வீடு முழுவதும் ப்ரௌனீஸின் மணம் பரவிக்கொண்டிருந்தது.

சமையலறை ஜன்னலை யாரோ தட்டுவதுபோன்று சார்லி உணர்ந்ததால், திரும்பிப் பார்த்தார். கறுப்பு நிற கரடி ஒன்று, கண்ணாடி ஜன்னல் மீது ஏறி பாவமாக ப்ரௌனீஸை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது.

bear
 

இந்தக் காட்சி, சார்லியை ஒரு நிமிடம் பயத்தில் நிலைகுலையச் செய்தாலும், ஒரு சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். வனத்துறையினர் வந்து கரடியை மீட்க, அரை மணி நேரம் ஆகிவிட்டது.

bear
 

அரைமணி நேரமும் அந்தக் கரடி, கண்ணாடி ஜன்னல் மீது தன் கால்களை வைத்துக்கொண்டு ஏக்கத்துடன் ப்ரௌனியை நோட்டமிட்டுக் கொண்டே இருந்துள்ளது. அதைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் சார்லி. புகைப்படம் வைரலாகிவிட்டது. ஆனால், கடைசிவரை அந்தக் கரடிக்கு ப்ரௌனீஸ் கொடுத்தாரா இல்லையா என்பதை சார்லி கூறவேயில்லை!

beer

நீங்க எப்படி பீல் பண்றீங்க