கலவரத்தின்போது வயலின் வாசித்த வாலிபர்!

வெனிசுலாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுக் கலவரத்தின்போது, போலீஸ் தாக்குதலையும் பொருட்படுத்தாமல், இளைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் காட்சிகள் வைரலாகிவருகின்றன.

வெனிசுலா

வெனிசுலாவில், அதிபர் நிக்கோலஸ் மடுராவின் ஆட்சிக்கு எதிராக, உள்நாட்டுக் கலவரங்கள் சில நாள்களாகவே நடந்துவருகின்றன. இதில், பல அப்பாவி மக்கள் உயிரிழந்துவருகின்றனர். மடுரா பதவி விலக வேண்டும் எனவும் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெனிசுலாவில் தினமும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் காரகஸ்ஸில் நடைபெற்ற கலவரத்தின்போது, இளைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் பெல்லட் குண்டுகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசுகையில், வெனிசுலா தேசியக்கொடி வரையப்பட்ட தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, வெனிசுலா தேசிய கீதத்தை வயலினில்  வாசித்துவருகிறார் இந்த இளைஞர். பதற்றமான ஒரு சூழலில், நிதானமாக அவர் வயலின் வாசிக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!