Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐன்ஸ்டீன், ஹாக்கின்ஸைவிட அதிக மதிப்பெண்! - இந்திய மாணவி சாதனை!

உலகின் பழைமையான மற்றும் கடினமான அறிவுக்கூர்மைத் தேர்வான 'மென்சா'வில்  மிக அதிக மதிப்பெண் பெற்று, இந்திய வம்சாவளி மாணவி வெற்றிபெற்றுள்ளார். உலகின் சிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங் ஆகியோரைவிட அதிக மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார்.

 

12 வயதாகும் ராஜ்கௌரி வடக்கு இங்கிலாந்தில் உள்ள செஷயரில் வசிக்கிறார். இந்த ஐக்யூ டெஸ்டில் அதிகபட்ச மதிப்பெண்களாக 160 இருந்தது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இதுபோன்ற சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரின் ஐக்யூ 160 மதிப்பெண்கள் எனக் கணக்கிட்டிருந்தார்கள். இந்தச் சாதனையை யாருமே எட்டாத நிலையில், பேராசிரியர் ஸ்டிபன் ஹாப்கிங் பெற்ற 160 என்கிற மதிப்பெண்ணை கடந்து 162 வாங்கியுள்ளார் ராஜ்கௌரி. உலகில் உள்ள மக்கள்தொகையில் சில ஆயிரம் பேர் மட்டுமே மென்சாவின் டாப் லெவல் என்று சொல்லக்கூடிய 140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 'ஜீனியஸ்' தகுதியை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரையும்விட அதிக மதிப்பெண்களை பெற்று ராஜ்கௌரி சாதனை படைத்துள்ளார். "போட்டிக்கு முன்பாக எனக்கு சற்று படபடப்பாக இருந்தது. ஆனால், நான் சாதித்துவிட்டேன்" என்று ராஜ் கௌரி தெரிவித்துள்ளார். "அவளின் பள்ளி ஆசிரியர்கள்தான் இந்த வெற்றிக்கு காரணம். முழுமையாக என் மகளை தேர்வுக்கு தயார்செய்த அவர்களே அனைத்துப் பெருமைக்கும் உரியவர்கள்" என்று மாணவியின் தந்தை சூரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close