Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்பாராத ட்ரம்ப்பின் நடவடிக்கையால் ஆட்டம்கண்ட வெள்ளை மாளிகை!

அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் (FBI Director) ஜேம்ஸ் கோமியைப்  பதவிநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். 

James comes
 

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலராக ஹிலாரி கிளின்டன் பணியாற்றியபோது, அரசுப் பணிகளுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தேசியப் புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணைக்கு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி தலைமைதாங்கினார். இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் ஜேம்ஸ். அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் தவறான தகவல்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இந்த நிலையில் ஜேம்ஸ் கோமி பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’புலனாய்வுப் பணிகளை ஜேம்ஸ் கோமியால் திறம்பட தலைமையேற்க முடியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அரசு முதன்மை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டு ஜேம்ஸை பதவி நீக்கம் செய்கிறேன். இனி அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு புதிய அதிகாரி தலைமைதாங்குவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.  ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்கர்கள் பெரும்பாலானோருக்கு ஜேம்ஸ் வேலைநீக்கம் செய்யப்பட்டதில் விருப்பமில்லை என்பதால், ட்ரம்ப்புக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

இதற்கிடையே, ஹிலாரி கிளிண்டன் இ-மெயில் விசாரணையால் ஜேம்ஸ் பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்று ஒரு தரப்பினர் மறுத்து வருகின்றனர். பின்பு எதற்காக இந்தப் பதவி நீக்கம்? அவர்கள் கூறும் காரணம் அதிரவைத்துள்ளது. 'அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் பங்கீடு இருப்பதாகவும், ரஷ்யா உதவியுடன்தான் ட்ரம்ப் வெற்றிபெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஜேம்ஸ் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்ததால்தான் டிரம்ப் ஜேம்ஸை பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ட்ரம்ப்பின் மோசடி வேலைகள் வெளியே அம்பலம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதவி நீக்கம்'' என்கிறது இந்தத் தரப்பு.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement