வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (11/05/2017)

கடைசி தொடர்பு:10:33 (11/05/2017)

எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம்... உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய காதல் ஜோடி!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அந்த சொர்க்கத்திலே திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்... அப்படி ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர்.

Everest wedding
 

ஜேம்ஸும் ஆஷ்லேவும் தங்கள் திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, 10 டிகிரி செல்ஸியஸ் குளிரில்.. மேகங்களுக்கு மிக அருகில்... தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் ஜேம்ஸ்.

marriage
 

ஜேம்ஸ், ஆஷ்லேவின் இந்தத் திருமண நிகழ்ச்சியில், போட்டோகிராஃபர் சார்லடன் சர்ச்சில் மற்றும் மலையேற்றத்தில் கைதேர்ந்த இருவர் உடனிருந்தனர்.  'எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்பில் திருமணம் செய்வது அவ்வளவு சுலபமில்லை' என்று தெரிவித்துள்ளார், மணமக்களுடன் மலையேறிய போட்டோகிராஃபர். 

everest marriage
 

 எவரெஸ்ட் சிகரத்தின்   ’base camp’-ஐ அடைய ஒரு வாரம் ஆகியுள்ளது. இந்த ஒரு வாரத்துக்காக ஜேம்ஸ், ஆஷ்லே ஓராண்டு பயிற்சி மேற்கொண்டனராம். மலையேறும்போது ஜேம்ஸுக்குப் பல தடவை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இந்தத் திட்டத்தைக் கைவிடும் சூழலுக்குக்கூட தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தன்னம்பிக்கையுடன் பேஸ் காம்ப்பை அடைந்து, அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

 

 

நடுங்கும் குளிரில், திருமண ஆடை அணிகலன்களுடன் அசத்தல் போட்டோஷூட் வேறு நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு அற்புத தருணத்தையும் அழகாகப் படம்பிடித்துள்ளார், போட்டோகிராஃபர் சார்லடன். ’எங்கள் திருமணத்தில் பாதிரியார் இல்லை, உறவினர்கள் இல்லை.மேகங்கள் மத்தியில் என் காதலியின் கரம்பிடித்துள்ளேன். இயற்கையின் மடியில் நடந்துள்ளது எங்கள் திருமணம்' என்று நெகிழ்ந்துள்ளார் ஜேம்ஸ்.

mount everest

நீங்க எப்படி பீல் பண்றீங்க