பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு... துணை சபாநாயகருக்கு வைத்த குறியா? | Balochistan bomb blast, senator injured!

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (12/05/2017)

கடைசி தொடர்பு:17:21 (12/05/2017)

பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு... துணை சபாநாயகருக்கு வைத்த குறியா?

பலுசிஸ்தானில் இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துனை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மஸ்துன் பகுதியில் உள்ள மசூதியின் அருகே இத்தாக்குதல் நடந்தது. இதில் 25 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலில் அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் மவுலனா அப்துல் கபூர் ஹைதரி என்பவர் படுகாயமடைந்துள்ளார். இதனிடையே ஹைதரியைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 


[X] Close

[X] Close