ரம்ஸான் நோன்பு ; பாகிஸ்தான் சட்டத்தை எதிர்க்கும் முன்னாள் பிரதமர் மகள்..!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ரம்ஸான் தொடர்பான சட்டத்தை அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி கடுமையாக விமர்சித்துள்ளார். 


ரம்ஸான் தொடர்பான மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் ரம்ஸான் கொண்டாடப்படும் மாதத்தில் பகல் நேரத்தில் பொதுவெளியில் வைத்து சாப்பிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் ஓட்டல்களுக்கு 500 முதல் 25,000 ரூபாய் வரை அபாராதம் விதிக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் அம்சங்கள் உள்ளன. இந்த சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், 'வெப்பப் பக்கவாதம் மற்றும் நீர் வறட்சி உள்ளிட்ட நோய்களால் மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள். அதற்கு காரணம் இந்த மோசமான சட்டம் தான். பட்டினியாக இருப்பதற்கு எல்லாராலும் முடியாது. இது ஒன்றும் இஸ்லாம் இல்லை. இந்தச் சட்டம் மூர்க்கத்தனமானது. இந்தச் சட்டம் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொள்ளவில்லை. பாகிஸ்தானில் எல்லோரும் நோன்பு இருக்கப் போவதில்லை. இங்கு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இருக்கின்றனர். தண்ணீர் குடிப்பதற்கு என்னை இந்த அரசு கைது செய்யுமா? என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!