ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை வெளியேற்றிய அமெரிக்க வங்கி!

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமியப் பெண், வங்கியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜமீலா

வாஷிங்டனில் உள்ள சவுண்ட் கிரெடிட் யூனியன் வங்கியில் பணம் செலுத்தச் சென்றுள்ளார் ஜமீலா முகமது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அவர் தலையில் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். வங்கியின் விதிப்படி தொப்பி, ஹிஜாப், கண்ணாடிகள் அணிந்து வர அனுமதியில்லை என அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே  இரண்டு அமெரிக்கர்கள் தலையில் தொப்பி அணிந்து வங்கியில் இருந்து கிளம்பியுள்ளனர். இதைக் கண்ட ஜமீலா ஒருதலைபட்சமாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாக கூறி வங்கி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோவுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,' எனக்கு நடந்த இனவெறி பாகுபாடு இனி யாருக்கும் நடைபெறக் கூடாது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து வங்கியின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!