Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வட கொரியாவின் நடவடிக்கை தவறுதான். ஆனால்...' - ரஷ்ய அதிபர் புதின் சூசகம்!

Vladimir Putin

அமெரிக்கா - வட கொரியா இடையில் பல மாதங்களாக பனிப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு ராணுவத் துறுப்புகள் அனுப்புவதும், வட கொரியா அமெரிக்காவை அச்சுறுத்துவது போல தொடர் அணு ஆயுத சோதனைகள் செய்வதும் என்று இரு நாட்டுக்கும் இடையேயான பிரச்னை தொடர்கதையாக இருக்கிறது. மேலும், அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஐ.நா முதல் உலக நாடுகள் வரை அனைத்துத் தரப்பும், இரு நாட்டுப் பிரச்னையால் மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்று அஞ்சுகின்றன. 

இந்த இரு தரப்பு உரசல்களுக்கு முத்தாய்ப்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கொரியா, 4500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் ஏவுகணை ஏவி சோதனை செய்தது. இந்த ஏவுகணையைக் கொண்டு அமெரிக்க எல்லைக்குள் வட கொரியா தாக்குதல் நடத்த முடியும் என்பதால், இரு நாட்டுப் பிரச்னை இன்னும் வீரியம் அடைந்துள்ளது. 

இந்நிலையில், வட கொரியா தரப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்ட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது. இதே போன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும், வட கொரியாவுடன் சுமுகமாகப் போவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னையைப் பற்றி புதின், 'அணு ஆயுத விரிவாக்கத்தை ரஷ்யா எதிர்க்கிறது. வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை மிகவும் ஆபத்தானது மற்றும் பெரும் பாதிப்புகளை விளைவிக்கக் கூடியது. அதே நேரத்தில், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாம் அமைதியான ஒரு முடிவை எட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அதைவிடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தக் கூடாது' என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். புதின் இவ்வாறு கூறியதால், இரு தரப்புகளில் எவருக்கும் தன் முழு ஆதரவைத் தெரிவிக்காமல் நடுநிலை வகித்துவிட்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close