பிரான்ஸின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் அதிபர் மேக்ரன்! | French PM Macron chooses new PM for the country

வெளியிடப்பட்ட நேரம்: 22:43 (15/05/2017)

கடைசி தொடர்பு:09:01 (16/05/2017)

பிரான்ஸின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் அதிபர் மேக்ரன்!

பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார், இம்மானுவேல் மேக்ரன். இதையடுத்து, தான் அதிபராகச் செயல்பட ஆரம்பித்த முதல் நாளே அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், மாற்றுக் கட்சியில் இருந்து பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளார் மேக்ரன். எட்வார்ட் பிலிப்பே (Edouard Philippe) என்ற வலதுசாரியைத்தான் பிரான்ஸின் அடுத்த பிரதமராக மேக்ரன் தேர்வுசெய்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட இருந்தவர்தான் பிலிப்பே. இதனால், பிரான்ஸ் அரசியல் களத்தில் ஆழ்ந்த அரசியல் அனுபவம் உள்ள ஒரு நபர்தான் தற்போது பிரதமரந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இடதுசாரி அரசியல் சார்புடைய மேக்ரன், வலதுசாரி சார்புடைய பிரதமரைத் தேர்ந்தெடுத்தது, இரு தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.