டிஸ்னியின் 'பைரேட்ஸ்' திரைப்படத்தைத் திருடிய நிஜ பைரேட்ஸ்!

உலகப் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்த திரைப்படம், 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்'.   இதன் ஐந்தாவது பாகம், இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் பாகத்திலும் ஜானி டெப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த இந்தப் படத்தின் பிரதியை, ஆன்லைனில் சிலர் ஹாக் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 'ஹாக் செய்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றால், பெரும் மதிப்புகொண்ட 'பிட் காயின்' தர வேண்டும்' என்று டிஸ்னி நிறுவனத்தை மிரட்டுவதகாவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

டிஸ்னி நிறுவனமோ, விரைவில் வெளியாகப்போகும் ஹாலிவுட் படத்தை ஹாக்கர்கள் வைத்துள்ளதாகக் கூறுகிறதே தவிர, எந்தப் படம் என்று இதுவரை அதிகாரபூர்வத் தகவலை வெளியிடவில்லை. மேலும், ஹாக்கர்கள் கேட்ட பிட் காயின் தொகையைக் கொடுக்க டிஸ்னி நிர்வாகத்தினர் தயாராக இல்லையாம். அமெரிக்க போலீஸுடன் இணைந்து இதற்கு முடிவுகட்டும் எண்ணத்தில் அவர்கள்  இருக்கிறார்களாம். 

கடந்த 2003-ம் ஆண்டு, 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' முதல் பாகம் வெளிவந்து தெறி ஹிட் அடித்தது. அதிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு பாகமும் டிஸ்னிக்கு ஜாக்பாட்தான். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' வரிசைப் படங்களின்மூலம் மட்டும் டிஸ்னி இதுவரை 3.72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் பார்த்துள்ளதாகத் தகவல் கூறுகிறது. மேலும், 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் 230 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!