வெளியிடப்பட்ட நேரம்: 05:48 (18/05/2017)

கடைசி தொடர்பு:07:46 (18/05/2017)

'எந்த ரகசியத்தையும் பரிமாறிக்கொள்ளவில்லை..!' - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

'ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க அதிபர் சந்திப்பில் எந்த ரகசியமும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை. தேவையென்றால் அதை நிரூபிக்கவும் நான் தயார்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் - புதின்

கடந்த வாரம், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லாவ்ராவ் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய பல ரகசியத் தகவல்களை இருவரும் பரிமாறிக்கொண்டதாகவும், ரகசியத் தகவல்களை ரஷ்யாவிடம் பரிமாறிக்கொள்ளக்கூடாது. அப்படி இருந்தும் ரகசியம் பரிமாறிக்கொண்டுள்ளனர் என்று பல அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வைத்தன. இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கய் லாவ்ராவ் மறுத்தார். இந்த நிலையில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பில் எந்தவிதமாக ரகசியங்களையும் பரிமாறிக்கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான உரையாடல் பதிவுகளையும் தேவைப்படும் பட்சத்தில் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளிடம் கொடுக்கத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.