டைம்ஸ் சதுக்க நடைபாதையில் பாய்ந்த வாகனம்... ஒருவர் பலி!

நியூயார்க்கில் இருக்கும் மிகப் பிரபலமான இடம் டைம்ஸ் சதுக்கம். இன்று அங்கு வெகு வேகமாக கார் ஓட்டி வந்த அமெரிக்க கப்பல்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர், நடைபாதையில் வந்தவர்கள் மீது காரை செலுத்தினார். இதனால், ஒரு பெண் உயிரிழந்தார். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில், 4 பேர் இக்கட்டான நிலையில் உள்ளனர்.  

இந்த கார் விபத்தை ஏற்படுத்தியவரான அமெரிக்காவின் முன்னாள் கப்பல்படை வீரர் ரோஜாஸை, நியூயார்க் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு தீவிரவாத நடவடிக்கை போல் தெரியவில்லை என்றாலும், அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நியூயார்க் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், நியூயார்க்கின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

நியூயார்க்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலை அடுத்து தொடர்ந்து டைம்ஸ் சதுக்கம் பல தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!