Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குல்பூஷன் ஜாதவ் வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் புதிய மனுத் தாக்கல்..!

குல்பூஷன் ஜாதவ் வழக்கில், 'சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும்' என பாகிஸ்தான் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளது.


பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி,  மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். அதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தின் விசாரணைக் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வழக்கு விசாரணை இரண்டு நாள்களுக்கு நடந்தது. 


வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், 'ஜாதவுக்கு முறையான சட்ட நிபுணரின் உதவியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அப்படிச் செய்யவில்லை. குல்பூஷனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற தொடர்பையும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவின் முறையீடு நியாயமானதுதான் என்று தெரிகிறது. எனவே, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்தது.

இந்த விஷயம் குறித்து இறுதி முடிவு எடுக்கும்வரை, எந்தவித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கக்கூடாது' என்று உத்தரவிட்டிருந்தது. தற்போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல்செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை ஆறு வாரத்துக்குள் விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவ் தொடர்பான இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு, வழக்கறிஞர்கள் அணியில் மாற்றம்செய்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement