குதிரை சிகிச்சைக்கு 30,000 டாலர் செலவு செய்த பார்வையற்ற பெண்..! | A woman spent 30,000 dollars for her horse treatment in America

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (20/05/2017)

கடைசி தொடர்பு:11:18 (20/05/2017)

குதிரை சிகிச்சைக்கு 30,000 டாலர் செலவு செய்த பார்வையற்ற பெண்..!

அமெரிக்காவில், பார்வையற்ற ஒரு பெண் தனக்கு வழிகாட்டியாக இருந்துவரும் குதிரையின் சிகிச்சை செலவுக்காக 30,000 டாலர் வரை செலவழித்துள்ளார். 

கோப்புப்படம்

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில், பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக நாய்கள் மற்றும் குதிரைகள் இருந்துவருகின்றன. அமெரிக்காவில் மட்டும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்கள் வழிகாட்டியாக இருந்துவருகின்றன. வழிகாட்டி நாய்கள் மற்றும் குதிரைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு முன்சென்று வழிகாட்டும். அமெரிக்காவில் ஆன் எடி என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர், பிறவியிலிருந்தே பார்வையற்றவர்.

அவருக்குப் பாண்டா என்ற குதிரை 14 ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்துவருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர்,பாண்டாவுக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் ஆன் எடி, பாண்டாவை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். அதன் குடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, பாண்டாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 30,000 டாலர் வரை செலவாகியுள்ளது. மேலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக, ஆன் எடி கூறியுள்ளார்.