பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரிப் பதவி விலக காலக்கெடு!

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

நவாஸ் ஷெரிப்

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக, ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் உண்மைத் தன்மையை நிலைநாட்ட, நவாஸ் ஷெரிப் பதவி விலகியே ஆக வேண்டுமென கூறப்படுகிறது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சங்கத்தினர் மற்றும் லாகூர் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் சங்கத்தினர் இணைந்து, நவாஸ் பதவி விலக வேண்டுமென்பதை அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், நவாஸ் பதவி விலகவில்லை என்றால், நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சதீக் கூறுகையில், ‘எதுவானாலும் நவாஸ் ஷெரிப் பதவி விலகமாட்டார். 2018-ம் ஆண்டு மே 31 வரை, பிரதமர் பதவியில் நவாஸ் தொடர்வார்’ என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!