குவைத் போரில் லட்சக்கணக்கான இந்தியர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ இயற்கை எய்தினார்! | The real hero of Kuwait war passed away today!

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (21/05/2017)

கடைசி தொடர்பு:18:28 (21/05/2017)

குவைத் போரில் லட்சக்கணக்கான இந்தியர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ இயற்கை எய்தினார்!

குவைத் போரின் போது அந்நாட்டில் வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்களை தனி ஒரு மனிதனாகக் காப்பாற்றிய ‘டொயோட்டோ சன்னி’ என்றழைக்கப்படும் சன்னி மாத்யூஸ் மரணமடைந்தார்.

சன்னி மாத்யூஸ்

1990-ம் ஆண்டு குவைத்தில் போர் நடந்த சமயம் அந்நாட்டில் இருந்த 1,70,000 இந்தியர்களை தனி ஒருவனாகக் காப்பாற்றிய பெருமை மிக்கவர் சானி மாத்யூஸ். குவைத் விடுதலை அடைவடஹ்ற்கு முன்னரே தன்னுடைய 20-ம் வயதில் குவைத் வந்த சானி மாத்யூ தன் சிறந்த தொழில் திறமையாலும், பண்பாலும் அதிக மதிப்பையும், நண்பர்களையும் பெற்று வாழ்ந்து வந்தவர்.

குவைத் போரின் போது அந்நாட்டில் எவ்வித உதவியும் இன்றி மாட்டிக்கொண்டு தவித்த அத்தனை மக்களையும் தன் சொந்த முயற்சியால் திட்டங்கள் பல வகுத்து ஈராக்கிடம் இருந்து பலவாறாக மீட்புப் பணியில் ஈடுபட்டு இந்தியத் தூதரகத்திடம் தனி ஒரு நபராகப் பேசி சுமார் 1,70,000   இந்தியர்களை 488 விமானங்களில் வெறும் 59 நாள்களில் இந்தியா மீட்டு அழைத்து வந்தார்.

அன்றைய காலத்தில் சர்வாதிகாரையாக விளங்கிய சதாம் உசேன் குவைத் நாட்டை அபகரிக்க போர் தொடுத்த போது அவரையே சமாளித்து இந்திய மக்களை மீட்டு எடுத்த ரியல் ஹீரோ சன்னி மாத்யூஸ் தன்னுடைய 81-ம் வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இவரது சாதனையை அடிப்படையாகக் கொண்டே பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில், ‘ஏர்லிஃப்ட்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.