அன்பால் நெகிழவைக்கும் அழகிகளுக்கு வயது 100!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரட்டையர் மரியா பிக்னாட்டன்  மற்றும் பவுலினா பிக்னாட்டன் வரும் மே 24 ஆம் தேதி தங்களது 100-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளனர். அந்த அற்புத நாளை இன்னும் சிறப்பாக்க கேமிலியா என்னும் புகைப்படக்காரர் இந்த முதிர்வயது அழகிகளை போட்டோஷூட் செய்து அசத்தி உள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன.  ஒவ்வொரு புகைப்படமும் மரியா மற்றும் பவுலினா இடையே உள்ள ஆழமான அன்பை வெளிப்படுத்தி உள்ளதாக நெட்டிசன்ஸ் உருகி வருகின்றனர். இணையத்தில் மட்டுமில்லை அவர்கள் வசிக்கும் பகுதி மக்களும் இவர்கள் மீது பேரன்பை வைத்துள்ளனர். இவர்கள் இருவருமே அனைவரிடமும் மிகுந்த இரக்கத்துடனும், அன்புடனும் நடந்துக் கொள்வார்களாம். அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் அழகிகளே!

viral photo

Do you like the story?

Please Appreciate the Author by clapping!