உங்களது தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு காரணம்..!

ஒருவரின் தூக்கமின்மைக்கு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் இருக்கும்.


இந்நிலையில், காற்று மாசுபாட்டினாலும் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் சுமார் 1,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.

இதில், காற்று மாசுபாட்டினால் நுரையீல் பாதிப்பது மட்டுமல்லாமல் தூக்கமின்மை ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக,  NO2 என்ற ஒரு வகைக் காற்று மாசுவால்தான் தூக்கமின்மை பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  


அதன்படி, இந்த வகைக் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டவர்களில் (சுமார் 5 ஆண்டுகள்) 60 சதவிகிதம் பேர், ஒவ்வொரு இரவும் தூங்குவதற்காகப் போராடுவதாகக் கூறப்பட்டுள்ளது. 


மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள், மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறதாம்.


இதனால், வேறு என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பது குறித்தும் விரிவான ஆய்வுகள்  நடத்தப்படுவதாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!