Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவின் அடுத்த அதிபரா?- அதிர்ந்துபோன மார்க் சக்கர்பெர்க் நீண்ட விளக்கம்

அமெரிக்காவின் அடுத்த அதிபர்’ எனப் பரவிவந்த வதந்திகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ’ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.

மார்க் சக்கர்பெர்க்


உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். ’அமெரிக்கா முழுவதும் சுற்றிப்பார்க்க விரும்புகிறேன்’ என மார்க் பதிந்த ஒரே ஒரு ஸ்டேட்டஸ், வைரலாகப் பரவி மார்க்குக்கு பல அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக அளித்துவிட்டது.

’அமெரிக்க மக்கள்குறித்தும் அவர்களின் பணி, முயற்சிகள், சமூகம் என அத்தனையும் அறிந்துகொள்வதற்காக, நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மாநிலமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறேன்’ என்று கருத்து பதிந்தார் மார்க். நெட்டிசன்கள்  அதைக் கையிலெடுத்து, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி மார்க் சக்கர்பெர்க்தான் என்ற ஸ்டேட்டஸ் காட்டுத்தீயாகப் பரவ, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் மார்க்.

அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘பரந்த பார்வை கிடைப்பதற்காகவும் சமூகத்துக்கு நாம் சிறப்பான சேவை அளிக்கிறோமா என்பதைக் காணவுமே பயணம்செய்ய உள்ளேன்’ எனப் பதிலளித்துள்ளார் மார்க் சக்கர்பெர்க்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement