குண்டு வெடிப்பில் தொலைந்தவரை கொண்டு வந்து சேர்த்த ட்விட்டர்!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொலைந்து போன பெண் ஒருவர் ட்விட்டர் சமூகவலைதளம் மூலம் தனது தோழியிடம் இணைந்துள்ளார்.

ட்விட்டர்

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 20-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதனிடையே குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போது ஹீதர் என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது தோழி விக்கி பேட்ஸ், ட்விட்டர் வலைதளத்தில் காணாமல் போன தோழியின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து குண்டு வெடிப்பின்போது அவர் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நேதன் என்பவர் பதிலளித்துள்ளார். இதன் மூலம் தோழிகள் இருவரும் இணைந்துள்ளனர். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் பலரும் இணைந்த தோழிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!