மீண்டும் ட்ரம்ப்பைத் தவிர்த்த மெலானியா ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் நேற்று ரோம் நகரத்துக்குச் சென்றபோது, ட்ரம்ப்பின் மனைவி மெலானியா மீண்டும் ஒருமுறை ட்ரம்ப்பின் கையைத் தட்டிவிட்டது, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மெலானியா ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலானியா ட்ரம்ப்புடன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் இஸ்ரேல் விமான நிலையத்தில் கைகொடுத்த ட்ரம்ப்பின் கையை, மெலானியா தட்டிவிட்ட வீடியோக் காட்சி, இதுநாள் வரை வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதன் பரபரப்பு முடியும் முன்னரே, மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் ட்ரம்ப் தம்பதியினரிடையே நடந்தேறியுள்ளது.

ரோமில் நேற்று, விமானத்திலிருந்து வெளியே வந்த ட்ரம்ப் தம்பதியினர், பார்வையாளர்களைப் பார்த்துக் கையசைத்தனர். அடுத்ததாக விமானத்திலிருந்து இறங்க ட்ரம்ப் தன் மனைவிக்குக் கைகொடுக்க, மீண்டும் அதைத் தவிர்த்தார் மெலானியா. உலக மீடியா முன் நடந்த இந்தச் சம்பவத்தை ட்ரம்ப் ஓரளவுக்கு சமாளித்தார். இருந்தபோதும், அமெரிக்காவின் முதல் பெண்மணி இவ்வாறு நடந்துகொள்வதின் பின்னணிகுறித்து சமூக வலைதளங்கள் கேள்வி எழுப்பிவருகின்றன. குறிப்பாக, இந்தச் சம்பவங்களை ஒபாமா தம்பதியருடன் ஒப்பிட்டு, அதிக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!