Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் கூறிய குழந்தைகள் யார் தெரியுமா?

மான்செஸ்டர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் நேரில்சென்று ஆறுதல் கூறினார்.


இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக் கச்சேரியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் திடீரென குண்டுவெடித்தது.  அதில் 19 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், ராயல் மான்செஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில்சென்று பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது என்று எலிசபெத் தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement