வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (26/05/2017)

கடைசி தொடர்பு:08:21 (26/05/2017)

வெளியேற்றப்பட்ட பல்கலைக்கழகத்திலேயே, கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் மார்க் சக்கர்பெர்க்..!

உலகின் 5-வது பெரிய பணக்காரர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற டாப் சமூக வலைதளங்களுக்குச் சொந்தக்காரர். இவரின் வளர்ச்சியைக் கண்டு, 'இவர்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர்' என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்தது. இப்படி தினசரி தவிர்க்க முடியாத செய்தியாகிவரும் மார்க் சக்கர்பெர்க், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

Zuckerberg


கடந்த 2004-ம் ஆண்டு, ஃபேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், சக்கர்பெர்க். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பல்கலைக்கழகத்தில் அவருக்கு சட்டத்துறைக்கான, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Mark Zuckerberg


அப்போது, மாணவர்களிடம் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சக்கர்பெர்க், தான் ஃபேஸ்புக்கிற்காக திட்டமிடப்பட்ட கம்ப்யூட்டர் குறித்த படங்களைக் காட்டியும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அவர் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்றும் பார்வையிட்டார். நிகழ்வுகள் அனைத்தையும், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் போஸ்ட் செய்தார். 


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 366-வது பட்டமளிப்பு விழாவில், இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.