Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எகிப்தில் தீவிரவாதிகள் தாக்குதல்- 23 பேர் பலி

எகிப்தில் கிறிஸ்தவர்களை ஏற்றிவந்த பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.

egypt

கடந்த மாதம் 9 ஆம் தேதி எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து எகிப்தில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இன்று மீண்டும் எகிப்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். செயின்ட் சாமுவேல் தேவாலயத்துக்குப் பயணம் மேற்கொண்ட காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 23 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முகமது மோர்சியின் பதவி பறிக்கப்பட்ட பின்பு எகிப்து அதிகளவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. எகிப்தில் இருக்கும் கிறிஸ்தவர்களைக் குறி வைத்து இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement