உலகின் அதிவேக விமானம்: அமெரிக்க ராணுவம் ரகசிய தயாரிப்பு

உலகின் அதிவேக விமானம் அமெரிக்க ராணுவத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானம் 2020 ஆம் ஆண்டு தன் முதல் பயணத்தை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக விமானம்

அமெரிக்க ராணுவத்தின் ரகசியத் தயாரிப்பான எக்ஸ்.எஸ்.1 என்ற போயிங் ரக விமானத்தின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘ஃபேன்டம் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயருடன் ‘டார்பா’ நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இந்த சிறப்பு விமானத்தை தயாரித்துள்ளது. 


இந்த சிறப்பு விமானத்தின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு ராக்கெட் போல் பறக்கத் துவங்கும் எக்ஸ்.எஸ்.1, வானில் விண்கலம் போல் பறக்கும். அதே வேளையில் தரையிறங்கும்போது சாதாரண விமானங்களைப் போலவே தரையிறங்கும். 1,360 கிலோ எடை கொண்ட இந்த எக்ஸ்.எஸ்.1 போயிங் ரக விமானம் பலத்த சத்தத்துடன் அதிவேகமாக செல்லும் திறன் உடையது. சாதாரண விமானங்களைவிட ஐந்து முதல் பத்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 


அமெரிக்க ராணுவம் சார்பில் உருவாகியிருக்கும் எக்ஸ்.எஸ்.1, வருகிற 2020 ஆம் ஆண்டு முதல் தன் பயணத்தைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 Do you like the story?

Please Appreciate the Author by clapping!