வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (29/05/2017)

கடைசி தொடர்பு:08:47 (29/05/2017)

சுவாசிக்கும் காற்றில் விஷம் கலந்த நகரம்... கேள்விக்குறியாகியுள்ள குழந்தைகளின் எதிர்காலம்!

உலகின் மிகவும் நச்சுத்தன்மை நிறைந்த நகரமாக, சாம்பியா (Zambia) நாட்டில் உள்ள காவ்வே (Kabwe) நகரைக் குறிப்பிட்டுள்ளனர், சர்வதேச மாசுக்கட்டுப்பாடு நிபுணர்கள்.

toxic town Kabwe
 

சாம்பியா, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இங்குள்ள காவ்வே என்னும் நகரில், ஈயச் சுரங்கங்கள் (lead mining) அதிகமாக உள்ளன. நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வுக் குழு இங்கு நடத்திய ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு காவ்வே நகர் மாசடைந்துள்ளது. காவ்வே நகர மக்கள் சுவாசிக்கும் காற்றில், அதிக அளவிலான வேதியல் நச்சுகள் கலந்துள்ளனவாம். 

’ஈயம்’ என்கிற உலோகம், கார் பேட்டரிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கார் பயன்பாடு அதிகரித்துவருவதால், இந்த உலோகத்தின் தேவையும் அதிகரித்துவருகிறது. காவ்வே நகரில் அமைந்துள்ள ’கறுப்பு மலை’ப் பகுதியில் அமைந்துள்ள  ஈயச் சுரங்கத்திலிருந்து, உலக நாடுகளுக்கு ஈயம் ஏற்றுமதிசெய்யப்படுகிறது. காவ்வே நகரின் காற்று, மண்  அனைத்திலும் நச்சுத்தன்மை கலந்துவிட்டதாக நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

toxic town Kabwe
 

இந்த நச்சுக்கள், அங்குள்ள குழந்தைகளின் மூளை நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதிக்கிறதாம். காவ்வேயில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ரத்தத்தில், லெட் அளவு அதிகமாக உள்ளதாம். வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல், காய்ச்சல், பக்கவாதம் என அடிக்கடி பாதிக்கப்படுவதால், அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே இல்லை என்கின்றனர், அங்குள்ள மக்கள். 'இந்த நிலை தொடர்ந்தால், காவ்வேயில் தற்போதுள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்' என்று சர்வதேச மாசுக்கட்டுப்பாடு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : The Guardian


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க