வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (29/05/2017)

கடைசி தொடர்பு:16:28 (29/05/2017)

அணு ஆயுதச் சோதனை: ஜப்பானை அதிரவைத்த வடகொரியா

மூன்று வாரங்களில் மூன்று ஏவுகணைகளைச் சோதித்து சர்வதேச நாடுகளின் கடும் கண்டனங்களைச் சம்பாதித்துவருகிறது வடகொரியா.

வடகொரியா


லக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. தற்போது மீண்டும் ஜப்பான் எல்லைப்பகுதியில் பெரும் அபாயம் நிறைந்த ‘ஸ்கட்’ ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. 1000 கி.மீ. தொலைவு பாய்ந்து சென்று தாக்கும் திறன்கொண்ட இந்த ஸ்கட் ரக ஏவுகணையை 450 கி.மீ. தொலைவுக்கு இயக்கிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தத் தொடர் அத்துமீறிய செயலால் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. இன்றைய சோதனைக்கு ஜப்பான் பிரதமர் தன் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார். ’வடகொரியாவின் அத்துமீறல்கள் அடக்கப்படும் என்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’ என்றும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.