Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் டைகர் உட்ஸ் கைது!

டைகர் உட்ஸ்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில், அந்நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

41 வயதாகும் உட்ஸ், கடந்த பிப்ரவரி மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, தொழில்முறை கோல்ஃப் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். சீக்கிரமே கோல்ஃப் போட்டிகளில் விளையாட ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அவர் மது அல்லது போதைப் பொருள் உட்கொண்ட காரணத்துக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  'எனக்கும் உடனடியாக தொழில்முறை கோல்ஃப் விளையாட வேண்டும் என்று ஆசைதான். ஆனால், இப்போது அவசரப்பட்டு மறுபடியும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு காயம் காரணமாக நான் ஓய்வில் இருக்க முடியாது.' என்று உட்ஸ் தெரிவித்திருந்தார். 

உட்ஸ், 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு டோர்னமென்ட்டிலும் வெற்றிபெறவில்லை. 2008-க்குப் பிறகு, அவர் எந்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement